Thursday, July 9, 2009

பிளாட்பார சிறுவனும் நானும்....

உலகம் எங்கேயோ போய்கிட்டு இருக்கு...புதிய புதிய கண்டுபிடிப்புகள். வசதி வாய்ப்புகள் என்று மனிதர்களின் முன்னேற்ற எல்லை விரிந்த படி...

ஆனால் இன்னும் பிளாட்பார ஏழைகள் அப்படியே...நாலைந்து குழந்தைகளுடன் சுகாதாரமற்ற தெருவொர பிளாட்பாரங்களில் அவர்கள் வாழ்க்கை.

ஆடையில்லா குழந்தை மூக்கில் வடியும் சளியை கூட துடைக்காமல் மண் புழுதியில் புரண்டப்படி... தினமும் இந்த காட்சிகளை ஆபீஸ் போகும் வழியில் நான் பார்க்கிறேன்.

கடந்த 50 ஆண்டுகால இந்தியாவில் எல்லாம் மாறி விட்டது. நோட்டில் எழுதியது இன்று கம்ப்யூட்டர் வரை வந்தாகி விட்டது. ஆனால் இது மட்டும் மாறவில்லை.

ஏன் இவர்கள் மட்டும் இப்படி வாழ்கிறhர்கள்? அவர்கள் வாழ்க்கை தரத்தை அவர்களால் மாற்றிக்கொள்ள முடியாதா? இப்படி பல கேள்விகள் என் முன் வந்து சென்றது.

வெயில் அடித்தாலும். மழை பெய்தாலும்...பிளாட்பாரத்திலே தங்கி எப்படி வாழ முடியும்?

படிப்பு வாசனையை அறியாமல் எப்படி இந்த சமுகத்தில் அவர்கள் வாழ்கிறhர்கள். என்னுள் வந்து போன கேள்விகளை அடக்காமல் அவர்களிடத்திலே கேட்க துணிந்தேன்.

சினிமாவே போலவே நான் நினைக்கவும் மழையும் வந்தது. பிளாட்பார வாசிகள் பொருட்களை அப்படியே போட்டு விட்டு அருகில் உள்ள மரத்தடிக்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஓடினர்.

அவர்களுடன் நானும் சேர்ந்து மரத்தடியில் ஒதுக்கினேன். அருகில் நின்ற சிறுவனிடம் மெல்ல பேச்சை கெடுத்தேன்.

தம்பி...ஸ்கூலுக்கு போகலீயா? அவன் என் கேள்விக்கு பதில் அளிக்காமல் பக்கத்தில் நின்றிருந்த சுமார் 40 வயது மதிக்கதக்க அந்த மனிதரை பார்த்தான். பார்த்த மாத்திரத்திலே அவன் தான் இந்த சிறுவனின் அப்பாவாக இருக்க கூடும் என்று மனதில் பட்டது. அதுவே சரியாகவும் இருந்தது.

நீங்க யாரு சாமி ஆபீசரா? அந்த மனிதன் என்னிடம் கேட்டான்.

நான் மெல்ல சிரித்துக்கொண்டே என்னை பற்றி விவரங்களை சொல்லி விட்டு, அவனிடம் ஒன்றை கேட்டேன்.

நீங்க கஷ்டப்படுகிறீங்க...எதிர்காலத்திலே உங்க மகன் கஷ்டப்படாமல் இருப்பதற்கு ஏதாவது செய்யக்கூடாதா?

அந்த மனிதர் என்னை கிட்டதட்ட ஏற இறங்க பார்த்து விட்டு சொன்னார். தம்பி...எங்க வாழ்க்க இது தான். யாரையும் ஏமாற்றி பிழைக்கல்ல...சைக்கிள் ரிப்பேர் செய்கிறேhம்...செருப்பு தைக்கிறேhம்...தோல் பை செய்றேhம் என்று அடுக்கி கொண்டே போனவரிடம்....

பெரியவரே அதெல்லாம் சரி...உங்க பிள்ளைகள படிக்க வச்சா... நாளைக்கு பெரிய உத்தியோகத்தில இருப்பாங்களல்ல...அவர் பதில் பேசாமல் பையனின் முகத்தை பார்க்க... அந்த சிறுவன் என் முகத்தை பார்த்தப்படி நின்றிருந்தான்.


நாளைக்கே உங்க பையன பள்ளியில சேர்க்க பாருங்க.. கொஞ்சம் அழுத்தத்துடனே சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். அதற்குள் மழையும் விட்டிருந்தது.

மறுநாள் அந்த இடத்தை நான் கடந்த போது... அந்த மனிதர் என்னை எதிர்பார்த்து நின்றிருந்தார்.

தம்பி ... நிறைய பேர் சொல்லியிருக்காங்க... சமுக நல அமைப்பில் இருந்து வாரோம்... உங்க பையனா பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்கன்னு சொன்னாங்க... ஆனா அவங்க சொன்னப்போது மனசில ஒண்ணும் படல...

ஆனா நீங்க உரிமை எடுத்து பேசியது.... எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்குது இங்க...
இப்போம் தான் பக்கத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சேர்த்து கிட்டு வந்திருக்கிறேன்.

அவன் பெரியாளா வருவானா அய்யா...என்று என்னை பார்த்து கேட்டது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

சமுக ஆர்வலர்கள் சொல்லி கேட்காதவர் என் பேச்சை கேட்டது உண்மையிலே எனக்கு சந்தோஷமாக இருந்தது. நான் அவரிடம் சொன்னேன். உங்க பையன் நிச்சயம் பெரியாளா வருவான் பாருங்கள்.

அவர் கண்களில் ஒரு பிரகாஷத்தை நான் பார்த்தேன்.

Wednesday, July 8, 2009

டெஸ்ட்

டெஸ்ட் ....டெஸ்ட் ....டெஸ்ட்

இனிய தொடக்கம்....

வணக்கம். ஒரு இனிய தொடக்கமாய் எனது இந்த வலைபதிவு மனிதர்களை தேடி... கடவுள் ஆகி போன அரிய மனிதர்களை தேடி இந்த பயணம்.

தெய்வம் போல வந்து... என்று சொல்லப்படுகின்ற அந்த மனித தெய்வங்களை தேடி... மனிதநேயம் காண இந்த பயணம். மானுடம் தளைக்க வாருங்கள் என்னுடன் கைகோர்க்க...